வத்திக்கான்புனித பேதுரு பேராலயம் மீண்டும் திறப்பு!
19 May,2020
வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயம் (செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா) பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்புக்காக இத்தாலி முடக்கப்பட்ட போது, தலைசிறந்த ரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடமான புனித பேதுரு பேராலயம் கடந்த மார்ச் 10ஆம் திகதி மூடப்பட்டது.
தற்போது தொற்றுவீதம் குறைந்ததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மக்களின் கோரிக்கைக்கு இணங்க இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட புனித பேதுரு பேராலயம் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது.
பார்வையாளர்கள் வரிசையில் நின்று, சமூக தொலைதூர விதிகளை கடைபிடித்து பேராலயத்தை பார்வையிட்டனர்.
அத்துடன், தேவாலயத்திற்குள் நுழைவதற்கு முன் வெப்பநிலை சோதிக்கப்பட்டு முகமூடி அணிந்திருக்கின்றார்களா என பொலிஸ் அதிகாரிகளால் அவதானிக்கப்பட்ட பின்னரே, பேராலயத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாப்பரசர் பிரான்சிஸ் உட்பட பலர் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் ரோம் தேவாலயங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது