இதற்கு மேலும் கட்டுப்பாடுகளை வைத்திருந்தால், மக்கள் பொங்கி விடுவர் என, அவற்றை தளர்த்தியுள்ள, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளன.'கொரோனா' வைரஸ் பாதிப்பால், உலக நாடுகள் பலவற்றில், பல வாரங்களாக, ஊரடங்கு அமலில் இருந்தன.
இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. இது, நாட்டின் பொருளா தாரத்தை முடக்கிவிட்ட நிலையில், பல்வேறு நாடுகளில், கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.' ஊரடங்கை விலக்கி கொள்வது ஆபத்தாகிவிடும்; வைரஸ் பாதிப்பு தீவிரமடையும்; இரண்டாவது அலை உருவாகும்' என, பல மருத்துவ நிபுணர் கள் எச்சரித்துள்ளனர்.
ஆனாலும், பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பதுடன், இதற்கு மேலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், மக்கள் பொங்கி விடுவர் என்ற அச்சத்தில், பல நாடுகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், 'மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணி வது, துாய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்' என, அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான, இத்தாலியில், 'உணவு விடுதிகள், 'கிளப்'கள், 'பார்'களை திறந்து விட வேண்டும்' என, மாகாண அரசுகள் நெருக்கடி கொடுத்து வந்தன.
அதையடுத்து, நேற்று முதல் அவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் கியூசெபே கான்டே மக்களுக்கு வெளியிட்டு உள்ள செய்தியில், 'நாம் மிகப் பெரிய, 'ரிஸ்க்'கை எடுக்கிறோம். 'இப்போது இல்லாவிட்டால், நாட்டை மீண்டும் திறந்து விடுவதற்கு வாய்ப்பே இல்லை' என, கூறியுள்ளார்.அமெரிக்காவில், பல மாகாணங்களில், பார்கள், மால்கள், கடற்கரைகள் திறந்து விடப்பட்டுள்ளன. 'ஊரடங்கு தொடர்ந்தால், அது மக்களிடையே மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது' என, அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர், அலெக்ஸ் அசார் கூறியுள்ளார்.
இதே போல, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனும், தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். தற்போது நமக்கு வேறு வழியில்லை. இந்த வைரசுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். 'அதற்காக, மிகப் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டிஉள்ளது' என, கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து, போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.'
திறந்து விடாமல் இருப்பது ரிஸ்க்; திறந்து விடுவதும் ரிஸ்க். அதனால், நாட்டின் நலன் கருதி திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர், மைக் டிவைன் கூறியுள்ளார்.கட்டுப்பாடுகள் முழுமை யாக நீக்கப்பட்டுள்ள சீனாவில், உள்நாட்டு விமான சேவை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஊரடங்குக்கு முன்பு இருந்த நிலையில், 60 சதவீதம் அளவுக்கு விமான சேவை இருப்பதாக கூறப்படுகிறது