கிருமிநாசினி தெருக்களில் தெளிப்பது பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு
17 May,2020
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க் கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியைத் தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை எனவும் இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் மனிதர்களுக்கு கண் மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.