விண்வெளி ராணுவத்துக்கு கொடி ரெடி! – அடுத்த கட்ட மும்முரத்தில் ட்ரம்ப்!
16 May,2020
உலகமே கொரோனா பீதியில் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் விண்வெளி ராணுவத்திற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் அதிபர் ட்ரம்ப்.
இதுவரை உலக நாடுகள் பலவற்றிலும் காலாட் படை, விமான படை, கப்பல் படை ஆகியவையே இருந்து வருகின்றன. முக்கியமாக கப்பல்படை கடல்வளம் கொண்ட நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கென பிரத்யேகமாக விண்வெளி படை ஒன்றை அமைக்க போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகள் தங்கள் வான்வெளி ஆராய்ச்சிகளை ஒதுக்கிவிட்டு மருந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் சீனா மீது பழி போட்ட ட்ரம்ப் தற்போது இந்த விண்வெளி இராணுவம் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் விண்வெளி ராணுவத்திற்கான அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் கொடியையும் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். ட்ரம்பின் இந்த செயல்பாடு பலரை எரிச்சலூட்டியிருப்பதாக கூறப்படுகிறது