கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஸ்லோவேனியா!
15 May,2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை முடிவுக்கு கொண்டுவந்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்லோவேனியா அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் ஏழுக்கும் குறைவான புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளை அதிகாரிகள் உறுதிசெய்த பின்னர், ஸ்லோவேனியன் அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
‘தொற்றுநோயின் முடிவு’ என்பது குடிமக்கள் மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மே மாத இறுதியில் காலாவதியாகும் என்பதாகும்.
மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இப்போது ஸ்லோவேனியாவுக்கு வரும் மக்கள் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்தே குறைந்தது ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், இராஜதந்திரிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் மக்கள் உள்ளிட்டவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இருக்கும்.
எனினும், தொற்று பரவுவதைத் தடுக்க குடிமக்கள் இன்னும் அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்ற கருத்தினை அரசாங்கம் வெளிப்படையாக கூறவில்லை.
மக்கள் உட்புற பொது இடங்களில் முகமூடிகளை அணிய வேண்டும். குறைந்தது 1.5 மீட்டர் (5 அடி) இடைவெளியில் நிற்க வேண்டும் மற்றும் பொது இடங்களில் நுழைந்தவுடன் கைகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் குரோஷியாவின் எல்லையான 2 மில்லியன் மக்கள் வாழும் ஸ்லோவேனியாவில், இதுவரை 1,464 கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 103 இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 12ஆம் திகதி தொற்றுநோயாளி இனங்காணப்பட்டார்.