உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த வியட்நாம்ஒருவர் கூட உயிரிழக்கவில்லை
15 May,2020
கொரோனா வைரஸ், உலக நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வாங்கி உள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 312 ஆக உள்ளது. இதில், 260 பேர் சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா முதல், இத்தாலி வரை பல நாடுகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்நேரத்தில், 9.55 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடான வியட்நாம், அனைத்து வளர்ந்த நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.