ரஷ்யாதகவல்களை திருடப் பார்க்கிறது: ஜெர்மனி பிரதமர் புகார்
15 May,2020
'என் தகவல்களை திருடுவதற்கு, ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது' என, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமர், ஏஞ்சலா மெர்க்கெல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பார்லி.,யில் நேற்று நடந்த ஒரு விவாதத்தின் போது, ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா மெர்க்கெல் கூறியதாவது:நம்முடைய தகவல்களை திருடுவதற்கு, ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2015ல், ரஷ்ய இணை தகவல் திருடர்கள், என்னுடைய, 'இ-மெயில்' தகவல் உள்ளிட்டவற்றை திருடிஉள்ளனர். அவர்கள், நம்முடைய, பார்லி.,யின் தகவல்களையும் திருட முயன்றுள்ளனர்.இந்தத் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒரு பக்கம், ரஷ்யாவுடன் நல்ல உறவுக்கு நான் முயற்சித்து வருகிறேன். ஆனால் ரஷ்யா, இதுபோன்ற திருட்டில் ஈடுபடுகிறது. இவ்வாறு இருந்தால், அவர்களுடன் எப்படி நல்ல நட்பை தொடர முடியும்! உளவு பார்ப்பது, ரஷ்யா எப்போதும் கையாளும் யுக்தியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.