இத்தாலியில் குறைந்தது கொரோனா தொற்று: ஊரடங்கு படிப்படியாக தளர்வு
12 May,2020
இத்தாலியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கினை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தில் அந்நாட்டு அரசு உள்ளது.
ஊரடங்கை, பல நாடுகள் தளர்த்தினாலும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, தொடர்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில், நேற்றைய நிலவரப்படி, முந்தைய, 24 மணி நேரத்தில், 802 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ஊரடங்கு துவங்கியதில் இருந்து, ஒரு நாளில் மிகக் குறைந்த பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும். மொத்த பாதிப்பு, இரண்டு லட்சத்து, 19 ஆயிரத்து, 814 ஆக உயர்ந்தது. மேலும், 179 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 30 ஆயிரத்து, 739 ஆனது.
இத்தாலியில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தில் அந்நாட்டு அரசு உள்ளது. இது குறித்து பிரதமர் க்யுசெப்பெ கொன்டெ கூறியதாவது, ' ஏற்கனவே மே 4 முதல் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வியாபார நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கு மே 18 முதல் அனுமதி வழங்கப்படும்., பொழுதுபோக்கு மையங்கள் அழகு நிலையங்கள், ஹோட்டல்கள் போன்றவை ஜூன் 1 முதல் செயல்படும் இவ்வாறு பிரதமர் கொன்டே தெரிவித்தார்.