குழப்பங்கள் நிறைந்த பேரழிவு” டிரம்ப் நிர்வாகத்தின் மீது ஒபாமா குற்றச்சாட்டு
10 May,2020
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடு “குழப்பங்கள் நிறைந்த பேரழிவுவை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கு டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
“அரசாங்கத்திடம் ‘இதனால் எனக்கு என்ன’ என்ற மனப்பான்மை நிலவுவதே தற்போது நேர்ந்துள்ள குழப்பம் நிறைந்த பேரழிவிற்கு காரணம்” என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனை ஆதரித்து தான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் கூறினார்.