முடி திருத்தும் இடங்களில் வழக்கமான நடைமுறைகளை மாற்றியுள்ள ஜேர்மனி!
07 May,2020
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியில் இருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்கவும் ஜேர்மனி அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிகளை சமீபத்தில் தளர்த்திய நாடான ஜேர்மனியில், முடி திருத்தும் இடங்களை தற்போது திறக்க அனுமதி தரப்பட்டுள்ளபோதும், வேலை செய்யும் முறை, வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறியுள்ளது.
ஜேர்மன் பொருளாதார மற்றும் சமூக நல விவகாரங்கள் அமைச்சகங்கள் இதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளன.
இதற்கமைய, வாடிக்கையாளருக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காத்திருப்புக்கான பகுதி கிடையாது, பத்திரிகைகள் கிடையாது, நுனிகளை மட்டும் சீர் செய்ய முடியாது, வாடிக்கையாளருக்கும், முடி திருத்துபவருக்கும் முகக்கவசம் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.