மாலைத்தீவில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்!
03 May,2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவி, கிட்டத்தட்ட ஒரு மாதமாகியுள்ள நிலையில், அங்கு இன்னும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக, அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் அலி வாகீத் தெரிவித்துள்ளார்.
தீவுகளில் சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் இருப்பதாகவும், அவர்களில் 100 பேர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், விடுதிகளில் தொடர்ந்து தங்க முடியாத மக்களுக்கு அரசாங்கம் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாலைத்தீவில் முதல் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றுகள், கடந்த மார்ச் 8ஆம் திகதி உறுதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொது சுகாதார அவசரகால நிலை, மார்ச் 12ஆம் திகதி சுகாதார அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
தீவில் மொத்தம் 468பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 17 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலைத்தீவு, ஆடம்பர ஓய்வு விடுதிகளுக்கு பெயர் பெற்றவையாகும்.