ஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,985 ஆக அதிகரிப்பு!
01 May,2020
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் தற்போது வரை 32,49,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு 2,29,543 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதிப்புகளில் இருந்து 10,17,982 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில் ஜெர்மனி ஜந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,61,985 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,504 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,23,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.