பரிஸ் நகர மக்களிற்கு இலவசமாக 22 மில்லியன் முகக்கவசங்களை வழங்க பரிஸ் நகரசபை முடிவு!
01 May,2020
பிரான்ஸில் உள்ள பரிஸ் நகர மக்களிற்கு, மேலதிகமாக 22 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக கொடுக்க பரிஸ் நகர சபை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கூறுகையில், ‘இந்த முகக்கவசங்கள் மருத்துவர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
இது முக்கியமான பாதுகாப்பு கருவி. அவசியம் தேவையான ஒன்று. பரிஸ் மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என கூறினார்.
இதுவரை பரிஸ் நகர மருத்துவமனைகளுக்கு ஆறு மில்லியனுக்கும் மேலான முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலதிகமாக, 22 மில்லியன் முகக்கவசங்கள் வாங்க கொள்வனவு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.