ரஷ்யாவில் பாதிப்பு அதிகரிப்பு; மே 11 வரை ஊரடங்கு நீட்டிப்பு
29 Apr,2020
ரஷ்யாவில் இதுவரை, 93,558 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 867 பேர் உயிரிழந்துள்ளனர். 8,456 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிராந்திய ஆளுநர்களுடனான மாநாட்டுக்குப் பின், ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளதாவது:
ரஷ்யாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமை மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. கொரோனா தொற்று பரவலின் உச்சத்தை இன்னும் நாம் கடக்கவில்லை. வைரசின் கொடிய அச்சுறுத்தல் உள்ளதால், மே 11 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். கொரோனாவின் மையமாகவுள்ள மாஸ்கோ நகரில் மட்டும் மே 13 வரை ஊரடங்கு நீடிக்கும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைவரும் மீறக்கூடாது. அப்போதுதான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மீறினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். மே 12 முதல் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும். அதற்கான கூடுதல் அதிகாரங்கள், பிராந்திய ஆளுநர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.