இங்கிலாந்து, வேல்சிலுள்ள பேணகங்களில், கடந்த இரு வாரங்களில் 4300 பேர் மரணம்.
28 Apr,2020
மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்பு வீதம் மிகவும் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்ற உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின் படி, இங்கிலாந்து மற்றும் வேல்சிலுள்ள பேணகங்களில் 4300 பேர் கடந்த இரு வாரங்களில் இறந்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதிலும் 25,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாக மிகவும் அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பேணகங்களை முறைப்படுத்துப்படுத்துவோரால் பெறப்பட்டதும் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தினால் முதன்முறையாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதுமான தகவல்களின் படி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் 4343 பேர் கொரோனாத்தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளனர்.
இந்த இறப்புகளில் அரைவாசி இறப்புகள் கடைசி 5 நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. இறப்புவீதத்தின் அளவு அதிகரிக்கும் வீதத்தில் இருப்பதனைக் இவை சுட்டிக்காட்டுகின்றன.
ஏப்ரல் 10 ஆம் திகதி வரை 1043 ஆக இருந்த பேணகங்களில் நிகழ்ந்த இறப்புகளானது மிகவும் அதிகரிக்கும் வீதத்தில் பேணகங்களில் அதிகரித்திருப்பதை இந்த உத்தியோகபூர்வமான தகவல் காட்டுகிறது.
இந்தத் தகவல்கள் இறப்புச் சான்றிதழ்களில் இருந்து பெறப்பட்டதென்றும் இறப்புச்சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் அதிகம் என்றும் ONS எச்சரித்துள்ளது. இந்த கொரோனாத் தொற்று இன்னமும் பேணகங்களில் அதன் உச்சநிலையை அடையவில்லை என பேணாகங்களை நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
“இந்தக் கொரோனாத் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் சமூக அமைப்பாக இந்தப் பேணகங்களே இருக்கின்றதென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பெறப்படும் தகவல்களில் இருந்து இது தெரிகிறது” என கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட 294 பேரை இழந்த MHA இன் தலைமை நிர்வாகியான சாம் மொனகன் தெரிவித்துள்ளார்.
தினசரி இறப்புகளை கணக்கில்கொள்வதை அரசாங்கம் தனது முதன்மைப் பணியாகக்கொள்ள வேண்டியது மிகவும் அவசரமாக உள்ளது என்பதையும் பேணகங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலயத்தையும் உருவாக்க வேண்டுமென்பதையும் இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுவதாக தேசிய பேணகங்களின் பேரவையின் தலைமை நிர்வாகியான விக்ரேனர் கருத்துத் தெரிவித்துள்ளர்.