கொரோனா வைரஸை இல்லாது ஒழிக்கும் இலக்கை நியூஸிலாந்து அடைந்துவிட்டது
27 Apr,2020
!
கொரோனா வைரஸை இல்லாது ஒழிக்கும் இலக்கை நியூஸிலாந்து அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னேற்பாடு நடவடிக்கைகளால், நியூஸிலாந்தில் கொரோனா (கொவிட்-19) பாதிப்பு பெரிதளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.
எனினும், இன்று (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் நியூஸிலாந்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கூறுகையில், ‘நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றே இல்லையென்று அர்த்தம் கிடையாது. ஆனால், நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களையும் கண்டறிந்துவிட்டோம் என்று அர்த்தம்’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுவரை நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1469பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,180பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 19பேர் உயிரிழந்துள்ளனர். இன்று எவ்வித தொற்று பரவலும் இன்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.