ஜேர்மனியில் பெரிதளவான பாதிப்புகள் இல்லாததற்கு ஓரளவு அதிர்ஷ்டம் தான் காரணம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
27 Apr,2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஜேர்மனியில் பெரிதளவான பாதிப்புகள் இல்லாததற்கு ஓரளவு அதிர்ஷ்டம் தான் காரணம் என வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஆண்ட்ரூஸ் மைக்கேலிஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளால் ஜேர்மனியில் பெரியளவிலான இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேர்மனியின் வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான ஆண்ட்ரூஸ் மைக்கேலிஸ் கூறுகையில்,
“ஜேர்மனியில் இழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டதற்கு ஓரளவு அதிர்ஷ்டம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதிகமான படுக்கைகளை வைத்துக்கொள்ளலாம் என்று தங்கள் அரசு எடுத்த முடிவு தான்.
தங்கள் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 40,000 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 30,000 படுக்கைகளில் செயற்கை சுவாச கருவிகள் வென்டிலேட்டர் பயன்படுத்தும் வசதி உள்ளது” என கூறினார்.
ஜேர்மனியினை பொறுத்தவரை நேற்று, 177பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,877ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் புதிதாக 1,514பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 156,513பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவை வதைக்கும் கொவிட்-19: பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயினில் கடுமையான பாதிப்பு!
ஐரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
குறித்த மூன்று நாடுகளில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்றைய (சனிக்கிழமை) தரவுகள் அமைந்துள்ளன.
இதற்கமைய ஸ்பெயினில் நேற்று மட்டும் 378பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,902ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல நேற்று மட்டும் 3,995பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 223,759பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியினை பொறுத்தவரை நேற்று, 177பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,877ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் புதிதாக 1,514பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 156,513பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ்சை பொறுத்தவரை நேற்று மட்டும் 369பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,614ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நேற்று மட்டும் புதிததாக 1,660பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,488ஆக உயர்வடைந்துள்ளது.