சவுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் மாற்றம்: குறிப்பிட்ட நேரம் மக்கள் நடமாட அனுமதி!
27 Apr,2020
சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் முதல் இரண்டு வாரங்களுக்கு மட்டும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக 24 மணி நேரமும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே நடமாட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் புதன்கிழமை முதல் அங்கு கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அன்று முதல் சில தொழிற்சாலைகளும் இயங்கலாம். எனினும் உடற்பயிற்சி கூடங்கள் உணவகங்கள் போன்ற சமூக விலகளை கடைபிடிக்க முடியாத இடங்களில் இந்த விதி விலக்குகள் கிடையாது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட விதிகள் அமுல் ஆகாது.