சீனாவிலிருந்தா கொவிட்-19 பரவியது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும்: மைக் பாம்பியோ
26 Apr,2020
சீனாவிலிருந்து தான் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவியதா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாயகமாக திகழும் சீனா, வேண்டுமென்ற வைரஸினை பரப்பிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் இதனை தொடர்ந்து ஏற்க மறுக்கும் சீனா, அமெரிக்கா தான் இதற்கு காரணம் என பதிலளித்து வருகின்றது. இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மைக் பாம்பியோ கூறுகையில், ‘சீனாவின் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதா என்பதைப் பிற உலக நாடுகளுக்கு அமெரிக்கா உறுதி செய்யும்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும், பொருளாதாரச் சரிவுக்கும் உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும். உலகப் பொருளாதார அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.