ஜப்பானில் நிற்கும் இத்தாலிய கப்பலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு
25 Apr,2020
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஜப்பான் நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 712 பேர் தலைநகர் டோக்கியோ அருகே யோகோஹாமா துறைமுகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 3ந்தேதி முதல் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் உள்ளவர்கள் ஆவர்.
இந்த வைரஸ் பிடியில் சிக்கி இதுவரை 345 பேர் ஜப்பானில் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 263 நோயாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 1,530 பேர் குணமடைந்து உள்ளனர்.
இதேபோன்று அங்குள்ள நாகசாகி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா என்ற இத்தாலிய கப்பலில் புதிதாக 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதன்மூலம் அந்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90-ஐ தாண்டி இருந்தது. இந்நிலையில், இன்று 60 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அந்த கப்பலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து உள்ளது.