உடல் நீல நிறமாக மாறியது..! செவிலியர்- கொரோனாவின் கொடூரத்தை விபரித்த நண்பர்
25 Apr,2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் தொடர்ந்தும் நீடித்திருக்கும் நிலையில், உயிர்களைக் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் பரிதாபமாக பலியாவதும் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அண்மையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த செவிலியர் ஒருவர் லண்டனில் பரிதாபமாக பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
லண்டன் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என அவரது நண்பர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவரின் நண்பரான சார்லஸ் தகவல் வெளியிடுகையில்,
Josephine Manini Peter (55) தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கடந்த 2002ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற நிலையில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
தனது பணியை விட்டு சொந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த Josephine அதற்கான விமான டிக்கெட்களை கூட முன் பதிவு செய்துவிட்டார்.
ஆனால் கொரோனா நோயாளிகளை கவனிப்பதற்காக தனது முடிவை மாற்றி கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தோன்றியது. ஆனால் மூன்று நாளில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அந்த இரவே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதோடு உடல் நீல நிறமாக மாற தொடங்கியது, பின்னர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
நாங்கள் பணிபுரிய லண்டன் வந்தோம், ஆனால் அவள் மட்டும் சவப்பெட்டியில் தனது வீட்டுக்கு செல்லவுள்ளார் என சோகத்துடன் பேசியுள்ளார்.