மரணப் படுக்கையில் அதிபர் கிம் ஜாங் உன்? வட கொரிய தலைநகரில் குவிந்த பொது மக்கள்
24 Apr,2020
வடகொரியா தலைநகர் பியாங் யாங்கில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததையடுத்து அங்கு பெரும் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ள அங்காடிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான அங்காடிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளுக்கு தொடக்கத்தில் தட்டுப் பாடு நிலவியது. அதன்பின் மற்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.