நடனம் ஆடும் நர்ஸ்: ஆனால் பின்னணியில் விழும் சாவு உள்ளே என்ன நடக்கிறது ?
24 Apr,2020
அடிக்கடி வைத்தியசாலைகளில் நடனம் ஆடி, அதனை வீடியோவாக எடுத்து தாதிமார் வெளியிடுகிறார்கள். அது மிகவும் வைரலாக பரவி பல மில்லியன் மக்களின் பாராட்டுகளை பெறுகிறது. ஆனால் உண்மையில் NHSக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று கேட்டால், தலை வெடிக்கும் ! ஆம் ஒரு வாரத்தில் மட்டும் 2,700 புற்று நோயாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு புற்று நோய் இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. போன வாரம் இவர்களுக்கு செய்யப்பட்ட அனைத்து ஸ்கேன் முடிவுகளும் பிழையானவை. என்பது ஒரு புறம் இருக்க.
வாரம் ஒன்றுக்கு சுமார் 1,000 சத்திர சிகிச்சைகள் தள்ளிப் போடப்படுகிறது. மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு செய்யவேண்டிய உயிர் காக்கும் ஆப்பரேஷன் பின் போடப்படுகிறது. இதேவேளை மூளையில் ஏற்படும் கோளாறுகளால், பார்சவாதம் ஆகலாம் என்று தவித்துக் கொண்டு, உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நூற்றுக்கணக்னான நோயாளிகளின் ஆப்பரேஷனும் பிற்போடப்படுகிறது. இது போக ஒட்டுமொத்தமாக சுமார் 40,000 ஆயிரம் படுக்கைகள், காலியாக இருக்கிறது.
இப்படி மிகவும் கேவலமான ஒரு வங்குரோத்தில் தான் பிரித்தானிய இயங்கிக்கொண்டு இருக்கிறது. அவசரமாக 999க்கு அழைப்பு விடுத்தால் கூட, 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. இது தான் இன்றைய பிரிட்டன் நிலை.