சிறப்பு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் கிம் ஜாங் உன் அடுத்து ஆளப்போவது யார் மனைவியா...? சகோதரியா...?

23 Apr,2020
 

 

 

 

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு உள்ள  ஒரு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வட கொரியா செய்தி நிறுவனமான டெய்லி என்.கே தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவியுடனான இந்த தகவல்களுக்கு சீனாவும், தென் கொரியாவும் மறுப்பு தெரிவித்துள்ளன.

வட கொரியாவின்  ஹியாங் சான் நகரில் உள்ள இந்த மருத்துவமனை நீண்டகாலமாக இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான  சிறப்பு வசதிகள் உள்ளன என்று டெய்லி என்.கே மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் டெய்லி என்.கே வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
ஹியாங் சான் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வட கொரியா தந்தை என அழைக்கப்படும் கிம் இல்-சங் இறந்த பின்னர் 1994 ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை இருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கும் என்று கிம் நம்பினார்.
கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் இருதய சம்பந்தப்பட்ட நோய்களில் நிபுணர்.  வெளிநாட்டில் கூட பயிற்சி பெற்றுள்ளார். டாக்டரும் கடுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் ஜெர்மனி மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.
அதிக புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிம் இந்த மாத  தொடக்கத்தில்  இருதய சிகிச்சை செய்து கொண்டார்
 
கிம் ஜாங் உன் உடல் நிலை பாதிப்பு :வடகொரியாவை அடுத்து ஆளப்போவது யார் மனைவியா...? சகோதரியா...?

வடகொரியாவின் தந்தை என அழைக்கப்படுபவரும் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் 2 ஆம் சுங்கின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ளாத அதிகாரிகள், பொதுமக்கள் தேச விரோதிகள் என முத்திரைக்குத்தப்படுவார்கள்.இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிரியா அதிபர் அல் ஆசாதுக்கு, தற்போது கிம் ஜாங் உன் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இரு நாடுகளின் உறவுகள் முந்தைய தலைவர்களின் உண்மையான உன்னத நோக்கத்திற்கும் இரு நாடுகளின் மக்களின் விருப்பத்திற்கும் ஏற்றதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார் கிம் ஜாங்.இதனிடையே, நாட்டின் முக்கிய விழாவில் முதன் முறையாக கலந்து கொள்ளாமல் தவிர்த்த கிம் ஜாங், ஏப்ரல் 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அமெரிக்க உளவு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டது.
அதுமட்டுமின்றி, குறித்த சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை மிக மோசமடைந்ததாகவும், அவர் பிழைப்பாரா என்பது சந்தேகமே எனவும் தகவல் பரவியது.ஆனால் அமெரிக்காவின் அந்த தகவல்களுக்கு சீனாவும், தென் கொரியாவும் மறுப்பு தெரிவித்துள்ளன.
கிம் சமீபநாட்களாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும் கண்ணில் படாமலும் இருப்பதால், இது அமெரிக்காவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், இப்படி ஒரு புரளியை கிளப்பி வருவதாகவும் கூறப்படுகிறது
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை சரியில்லை, அடுத்து ஆட்சியமைக்கப்போவது அவருடைய தங்கை தான் என்று செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பலருக்கும் தெரியாத அவரது மனைவி குறித்து சில தகவல்களை இப்போது சர்வேதச ஊடங்கள் மீண்டும் கிளற ஆரம்பித்துவிட்டன.
வடகொரியாவில் இனி கிம் ஜாங் உன்னின் தங்கையின் ஆட்சி தான் என்று கூறி அவரைப் பற்றி வரலாறுகள் எல்லாம் செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்க, வடகொரியாவிற்கு அருகில் இருக்கும் தென்கொரியாவோ, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று இந்த தகவலை மறுத்து உள்ளது.
இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் மனைவி குறித்து சர்வதே ஊடகங்கள் கிளர ஆரம்பித்துவிட்டனே என்று தான் சொல்ல வேண்டும்.கிம்மின்  மனைவி என்ன ஆனார்? என்ற பல சந்தேகங்கள் எழ அவரைப் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிம் ஜாங் உன்னின் மனைவியின் பெயர் ரி சோல் ஜூ. இவர் ஆரம்பத்தில் சியர் லீடாராக இருக்க, விளையாட்டு போட்டி ஒன்றில் பார்த்த கிம் ஜாங் உன்னுக்கு இவரை பிடித்து போக, காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.இதற்கு ரியும் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை கிம் தன்னுடைய தந்தையின் சம்மதத்துடனே செய்துள்ளார்.
தந்தை மீது அவ்வளவு பாசம், மரியாதையோ, அதே பாசம் தான் கிம் ஜாங் உன்னுக்கு தங்கை மீதும் தற்போது வரை இருக்கிறது. இருவரும் சுவிட்சர்லாந்தில் ஒன்றாக படித்துள்ளனர். கிம்மின் தந்தை மரணத்திற்கு பின்பு தான், அவருடைய தங்கை கிம் யோ ஜாங் வெளி உலகத்திற்கு தெரியவந்தார்.
தந்தை இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த அதிகாரிகளுக்கு எல்லாம் தேவையான உத்தரவுகளை பிறப்பித்தது கிம் யோ ஜாங் தானாம், கிம் கூட அப்போது ஓரமாக தான் நின்றுள்ளார். அப்போது யோ தான் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுச் செய்தார். கூடவே அண்ணனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறியடியும் இருந்தார். தந்தை இறப்புக்கு பின் கிம்மிடம் ஆட்சி வர, அவர் தேவையான ஆலோசனைகளை எல்லாம் மனைவியை விட சகோதரியிடமே கேட்டு வந்தார்.
ஏனெனில் தங்கை மீது அந்தளவிற்கு ஒரு நம்பிக்கை, அதேபோல யோவும் அண்ணனுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளைக் கூறி அவருக்கு ஆட்சியை முழுமையாக எளிதாக்கியுள்ளார்.
இந்த அன்பான உறவை சற்று தள்ளி இருந்தபடியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர் தான் மனைவி ரி சோல் ஜூ. இவர் மிகப் பெரிய அறிவுஜீவி குடும்பத்திலிருந்து வந்தவர்.இவரது அப்பா ஒரு பேராசிரியர். அம்மா ஒரு மருத்துவர். மிகவும் வசதியான குடும்பம். மிகவும் அழகானவர். இவரது வசீகரமே சிரிப்புதான். அந்த சிரிப்பில் மயங்கித்தான் கிம் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர் ரி சோல் ஜூ. கணவருக்கு தேவையானதை செய்து கொடுப்பவர். தனது 3 குழந்தைகளையும் அந்தளவிற்கு பாசமாக பார்த்து கொள்பவர்.கணவரின் வேலைகளில் தலையிடுவது இல்லையாம். குடும்பத்தோடு இருப்பதே அவருக்குப் மிகவும் பிடிக்குமாம். அதை கிம்மும் தடுப்பதில்லையாம்.
கிம் ஜாங் உன்னுக்கு திருமண முடிந்துவிட்டது என்ற தகவலே 2011-ஆம் ஆண்டு தான் வெளியுலகிற்கு தெரியவந்தது.அதாவது அவரது மாமனார் கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் ரி யின் முகமே வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
 அப்படி ஒரு ரகசியமான நாடுதான் வட கொரியா. இவர்களுக்கு 2009-ல் கல்யாணம் நடந்துள்ளது. சிலர் 2010-என்று சொல்கிறார்கள்.ஆனால், கிம் இதுவரை திருமணத்தைப் பற்றி பேசியதே இல்லை.
வட கொரியாவைப் பொறுத்தவரை ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது.இதன் காரணமாகவே ரி குறித்தோ மற்றும் தங்கை யோ குறித்தோ அங்கு இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.
கிம்மின் மனைவில் ரி பன்முகத் திறமை கொண்டவர். பாட்டு, நடனம் என அசத்துவார். அதேபோல வீட்டு வேலைகளிலும் கெட்டி. குடும்பத்தை நிர்வகிப்பதிலும் சூப்பர் திறமைசாலி.
சீனாவில் இசை குறித்த படிப்பை படித்துள்ளா இவர், வட கொரியாவில் உள்ள உன்ஹாசு ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவிலும் பாடி வந்துள்ளார்.பின்னர் இந்த குழுவைச் சேர்ந்த அனைவரையும் கிம் சுட்டுக் கொன்று விட்டார். என்ன காரணம் என்ற தெரியவில்லை. ஆனால் இதில் யாராவது கிம்மின் மனைவியிடம் ஏதாவது வாலாட்டியிருக்கலாம் என்ற தகவல் மட்டுமே உள்ளது. தற்போது வரைஉண்மை காரணம் தெரியவில்லை.
கடந்த 2018-ல் தனது மனைவியுடன் சீனாவுக்கு கிம் சென்றிருந்த போது, ரி போட்டிருந்த ஆடை அவ்வளவு அழகாக இருந்தது. சீன ஊடங்கள் கிம்மை விட்டு விட்டு ரியைப் பற்றியே நிறைய எழுதித் தள்ளின.அவரது புகைப்படங்கள் வைரலாகின. இப்படி ஒரு அழகு தேவதையா கிம்முக்கு என்று அத்தனை பேரும் வாய் பிளந்து போயினர்.
ஹாங்காங் பேஷன் உலகமே விழுந்து விழுந்து ரி குறித்து பேசி சிலாகித்தது. இவர் ஒரு ஸ்டைல் ஐகான் என்றும் புகழ்ந்து தள்ளினர்.தற்போது கிம்மின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது கிம்மின் மனைவியா அல்லது தங்கையா என சர்வதேச ஊடகங்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றன

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies