வடகொரிய தலைவர் உடல் நிலைகுறித்த தகவல்: அவர் நலமடைய வாழ்த்துகிறேன்- டொனால்டு டிரம்ப்
22 Apr,2020
வடகொரிய தலைவர் உடல் நிலைகுறித்த தகவலுக்கு நான் அவர் நலமடைய வாழ்த்துகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் கடந்த உன் 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தென் கொரிய செய்தி நிறுவனம் கிம் ஜாங் உடல் நிலை தொடர்பில் மறுப்பு தெரிவித்ததை அடுத்து,அமெரிக்க செய்தி நிறுவனமும், கிம் ஜாங் உன்னிற்கு எந்த உடல் பிரச்சினையும் இல்லையென்றால், அவர் விரைவில் மீண்டு வருவார், அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
நான் இதை மட்டுமே சொல்ல முடியும், நான் அவரை நலமடைய வாழ்த்துகிறேன், அவர் நன்றாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் தற்போது வெளிவரும் அறிக்கைகள் உண்மை இல்லை என்று நான் நம்புகிறேன் என கூறினார்.