கொரோனா நோயாளிகளை கண்டறியும் கருவியை உருவாக்கியது ஈரான்
17 Apr,2020
கொரோனா பாதிப்பை 100 மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் ஸ்மார்ட் கருவியை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகர படைப்பிரிவு உருவாக்கியுள்ள இந்த கருவியின் அறிமுக விழாவில் தளபதி ஹுசைன் சலாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தக் கருவியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் 5 நொடிகளில் கண்டறிந்து தெரிவிக்கும் என கூறினார்.
கருவியின் அன்ரனா காட்டும் திசையில் 100 மீட்டருக்குள் வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதி இருந்தால் அதனையும் கண்டறியும் வகையில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரத்தப் பரிசோதனையின்றி நோயாளிகளை விரைவாகக் கண்டறிவதோடு, கிருமியின் தாக்கம் இல்லாத பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது தவிர்க்கப்படும் என்றும் சலாமி தெரிவித்தார்.