பிரான்ஸ் நாட்டில் மே 11 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
14 Apr,2020
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாட்டு மக்களிடம் கூறும்பொழுது, ‘இந்த தொற்று நோய் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும், நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது என கூறினார். கொரோனா வைரசை எதிர்கொள்ள வரும் மே 11ந்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்.
நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொடங்கும்’ என கூறினார்.
‘வருகிற மே 11ந்தேதி முதல் பள்ளி கூடங்கள் செயல்பட தொடங்கும். ஆனால், உணவு விடுதிகள் மற்றும் கஃபேக்கள் தொடர்ந்து மூடியிருக்கும். அடுத்த உத்தரவு வரும்வரை ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுடனான எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
வரும் மே 11ந்தேதி முதல் புதிய அத்தியாயம் தொடங்கும். அது முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும். நிலைமைக்கு ஏற்ப விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்’ என்றும் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.