நியூயோர்க் – பாதிப்பு எண்ணிக்கை, !!!
10 Apr,2020
கொரோனோ வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தனிப்பட்ட பாதிப்புகளை அமெரிக்காவின் தனி ஒரு மாநிலமான நியூயோர்க் முந்திச் சென்றுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
கோவிட் -19 இன் பரவுகை ஆரம்பிக்கப்பட்ட பின் நேற்று வியாழக்கிழமை 10,000 பேர் புதிதாக இனம் காணப்பட்டு உள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 159,937 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் 153,000 பேர் மற்றும் இத்தாலியின் 143,000 பேர் என்ற எண்ணிக்கைகளை விட அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு 82,000 பேர் அளவிலேயே பாதிக்கப்பட்டதாக சீனாவின் உத்தியோகபூர்வதகவல்கள் தெரிவித்திருந்தன.
கொரோனா வைரஸ் பாதிப்புகளில் நியூயார்க் மாநிலம் உலகத்தில் முன்னிலை வகிக்கும்போது, அதன் இறப்பு எண்ணிக்கை (7,000) ஸ்பெயினையும் (15,500), இத்தாலியையும் (18,000) விட பின்தங்கியிருக்கிறது, இருப்பினும் இது சீனாவின் (3,300) உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
நியூயார்க் நகரில் ஒரு வெகுஜன புதைகுழியில் சவப்பெட்டிகளை புதைக்கும் தொழிலாளர்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் தொழிலாளர்கள் மேசைகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய குழிக்குள் இறங்குவதை ட்ரோன் கருவிகளினூடு பெறப்பட்ட காட்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன.
இந்த படங்கள் ஹார்ட் தீவில் (Hart Island, off the Bronx,) எடுக்கப்பட்டுள்ளன, இது 150 ஆண்டுகளுக்கும் முன்னதாக, உறவினர்கள், குடும்பங்களினது உறுப்பினர்களின் இறுதிச் சடங்குகள் செய்யும் இடமாக ஒரு பெரிய புதைகுழியாக நகர அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டதக தெரிவிக்கப்பட்டுள்ளது.