கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
                  
                     09 Apr,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம் என கூறி இருந்தார்.
	
	சுகாதார அமைப்பின் தலைவர்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எழுப்பிய விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்து உள்ளார்.
	இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:-
	தயவுசெய்து இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது உலக அளவில் உங்களிடம்  வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.
	தயவுசெய்து கொரோனாவை  அரசியல்மயமாக்குவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆபத்தான வைரஸைத் தோற்கடிக்க நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமானதாக இருக்கும்.
	நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நாங்கள் இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
	கொரோனா வைரஸ் போன்ற ஒரு புதிய மற்றும் தீவிரமான நோயை எதிர்கொள்ளும்போது இந்த அமைப்பு ஒரு நடவடிக்கைக்குப் பிறகு மதிப்பீடு செய்கிறது. பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண எங்கள் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம் உலக சுகாதார அமைப்பு தொற்றுநோயிலிருந்து உயிர் இழப்பு குறைப்புகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறது என கூறினார்.
	அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
	 
	அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார்.
	அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கும், செனட் சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
	
	இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் தனது பரப்புரையை ரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
	ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ் இதனால் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கும்- ஜோ பிடனுக்கும் போட்டி உறுதியாகி உள்ளது.