சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
07 Apr,2020
ஐ.நா.,; சர்வதேச அளவில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 64,734 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 46 ஆயிரத்து 648 பேர் மீண்டுள்ளனர்.
அதிகப்பட்சமாக இத்தாலியில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மட்டும் 1500 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இங்கு பீதி காரணமாக ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் 81 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 329 பேர் பலியாகி உள்ளனர்.
பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்
உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1480 பேர் பலியாகி உள்ளனர். இந்நாட்டில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அதிக மரணம் சந்தித்த இத்தாலி
உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 168 பேர். இதில் 11 ஆயிரத்து 947 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் பாதித்தவர்கள் 89 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7, 560 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் 41 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டனர். 4,313 பேர் பலியாகினர். ஜப்பானில் 3, 139 பேர் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 13, 912 பேர் பாதிக்கப்பட்டு 231 பேர் இறந்துள்ளனர். இலங்கையில் 159 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்துள்ளனர்.
ஈரானில் 55 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டு, 3,452 பேர் பலியாகினர். ஜெர்மனியில் 96 ஆயிரத்து 092 பேர் பாதிக்கப்பட்டு 1,444 பேர் பலியாகினர். பெல்ஜியத்தில் 18 ஆயிரத்து 431 பேர் பாதிக்கப்பட்டு 1,283 பேர் பலியாகி உள்ளனர். நெதர்லாந்தில் 16,627 பேர் பாதிக்கப்பட்டு 1,651 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் 2,818 பேர் பாதிக்கப்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3, 671 பேர் பாதிக்கப்பட்டு 99 பேர் பலியாகி உள்ளனர்.