கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் - தரமற்றவை என்ற புகாருக்கு சீனா மறுப்பு
06 Apr,2020
வெளிநாடுகளின் தேவைக்காக சீனா 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், சரியாக பயன்படுத்த தெரியாததால், தரம் குறித்து சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதாக சீன வர்த்தக அமைச்சக அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வெளிநாடுகளின் தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை சீனா அதிகரித்துள்ளது. ஆனால், சீன உபகரணங்கள் தரமற்றவையாக இருப்பதாக நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. 6 லட்சம் முக கவசங்களை நெதர்லாந்து திருப்பி அனுப்பியது. ஆயிரக்கணக்கான சோதனை கருவிகளை ஸ்பெயின் நிராகரித்தது. இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், சீன வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி ஜியாங் பேன் கூறியதாவது:-
சீன தயாரிப்புகள் குறித்த புகார்கள், முழு உண்மையை பிரதிபலிக்கவில்லை. கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 386 கோடி முக கவசங்கள், 3 கோடியே 75 லட்சம் கவச உடைகள், 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள், 21 லட்சம் சோதனை கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்துள்ளோம். சரியாக பயன்படுத்த தெரியாததால், தரம் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்