புலியினையும் விட்டு வைக்காத கொரோனா!
06 Apr,2020
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ப்ரோன்ஸ் வனவிலங்குப்பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நான்கு வயதான நடியா என்ற பெயர்கொண்ட மலையன் புலியே மனிதனின் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் என நம்பப்படுகிறது.
இந்தப்புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து அதற்கு அருகில் வாழ்ந்துவந்த இரண்டு சைபெரியன் புலிகள் மற்றும் ஆபிரிக்க சிங்கங்களுக்கும் அதே அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
அவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
குறித்த வனவிலங்குப்பூங்கா மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.