சீனாவின் கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்கள் மறைக்கபடுகின்றன -அமெரிக்கா குற்றச்சாட்டு
                  
                     02 Apr,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸ் வெடித்ததில் சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.
	சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
	இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
	
	சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக சீனா கூறுகிறது. கொரோனா உருவான சீனாவில் மொத்தமே 81,000 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதுவே அமெரிக்காவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும் மேல், அதே சீனாவின் எல்லைக்குள் இருக்கும் பீஜிங்கில், 2.15 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு 569 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
	கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கையை உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவாக வெளிஉலகுக்கு அறிவிக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இதில் குறிப்பாக சீனா பொய்த் தகவல்களையே தந்து உள்ளதாக கூறுகிறார்கள்.
	இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் சீனாவின் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் துல்லியமானவை என்று எங்களுக்கு எப்படி தெரியும் அவற்றின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளன.
	சீனாவுடனான உறவு ஒரு நல்ல உறவு" என்றும் அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நெருக்கமாக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
	குடியரசுக் கட்சியின் செனட்டர் பென் சாஸ் சீனாவின் கொரோனா கணக்குகளை  “குப்பை பிரச்சாரம்” என்று தாக்கினார்."சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இறப்புகள் அதிகம் என்ற கூற்று தவறானது" "எந்தவொரு இரகசிய தகவல்களிலும் கருத்து தெரிவிக்காமல், இது மிகவும் வேதனையானது.சீன கம்யூனிஸ்ட் கட்சி பொய் சொல்கிறது, ஆட்சியைப் பாதுகாக்க கொரோனா வைரஸ் பற்றி தொடர்ந்து பொய் சொல்லும்." என்று சாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.