உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு!
                  
                     01 Apr,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	 உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  42,309பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது.  அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,57 லட்சத்தைக் கடந்துள்ளது.  சுமார் 1,77 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
	
	இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது; இதுவரை 38 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 132 பேர் குணமடைந்துள்ளனர்!
	இத்தாலியில் மட்டும்  12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.  ஸ்பெயின் நாட்டில்  8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். கிட்டதட்ட 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
	அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1  லட்சத்து 88 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.
	ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 4,076 ஐ எட்டியுள்ளது, இது சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இரு மடங்காகும். சனிக்கிழமை இறந்தவர்களின் எண்ணிக்கை 2,010 ஆக  இருந்தது.
	உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரித்து உள்ளது.
	25 ந் 21,282 ஆக இருந்த உயிரிழப்பு தற்போது 42309 ஆக அதிகரித்து உள்ளது