பொதுமக்களை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள்! நடுவானில் தடுத்து நிறுத்தியதாக தகவல்
                  
                     30 Mar,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	சவுதி அரேபியாவில் பொதுமக்களை குறிவைத்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அரச வான்பாதுகாப்பு படைதெரிவித்துள்ளது.
	ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியார்கள் குழு ஏவிய இரண்டு ஏவுகணைகளை சவுதி தலைநகர் ரியாத்துக்கும் தெற்கு நகரமான ஜசானுக்கும் இடையேயான வான் வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
	தலைநகரை சுற்றி பல குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன, அதைத் தொடர்ந்து சில வடக்கு மாவட்டங்களில் அவசர வாகன சைரன் சத்தம் கேட்டதாக ரியாத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
	இந்த இக்கட்டான நேரத்தில் ஏவுகணைகளை ஏவுவது ஹவுத்தி போராளிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஈரானுக்கும் உண்மையான அச்சுறுத்தலை பிரதிபலிக்கிறது.
	ஏனெனில் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சவுதி அரேபியா மற்றும் அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை குறிவைக்கவில்லை
	மாறாக உலகின் ஒற்றுமையையும் ஆதரவையும் குறிவைக்கிறது என சவுதி கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் அல்-மாலிகி கூறினார்.
	ரியாத்தில் உள்ள குடியிருப்பு மாவட்டங்களுக்கு வான்வெளியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஏவுகணையின் குப்பைகள் விழுந்ததால் இரண்டு பொதுமக்கள் சற்றுகாயமடைந்தனர் என்று சவுதி அரேபியாவின் உள்ளுர் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர்உறுதிப்படுத்தியுள்ளார்.
	ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என தெளிவாக தெரியவில்லை மற்றும் தற்போது வரை இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.