அமெரிக்காவில் கொரோனா தோற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை!
28 Mar,2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளமையினால் அவர்களுக்கான சிகிச்சைகளளை வழங்க மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சுவாசம் தொடர்புடைய தொற்று என்பதனால் நோயாளிகள் சுவாசிக்க உதவும் வென்டிலேட்டர் இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நியூயோர்க், நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட் வைத்தியசாலை மற்றும் பிற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் பற்றாக்குறை குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 18,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் 1,600 பேர் உயிரிழந்துள்ளதுடன் சீனா மற்றும் இத்தாலியை விஞ்சி அமெரிக்கா தற்போது அதிக பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.