கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி பாதிக்கப்பட்டவர்கள் தெருக்களில் சிகிச்சை பெற்று வரும் அவலம்”,
27 Mar,2020
இத்தாலி மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நிரம்பி வழிவதால், மருத்துவமனைக்கு வெளியேயும் , தெருக்களிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலியில் மக்கள் இந்த அவல நிலைக்கு ஆளாக அந்நாட்டு அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாமல் கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிட்டதே காரணமாகும். மேலும் மருத்துவத்துறையில் உச்சத்தில் இருக்கும் இத்தாலி போன்ற நாட்டிற்கு இந்த நிலைமை வந்ததற்கு அந்நாட்டு மக்கள் சமூக விலகளை முறையாக பின்பற்றாததே முக்கிய காரணமாகும்.
இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸினால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இத்தாலியில் கொரோனா பாதிப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இத்தாலியில் பாதிப்பு சீனாவை காட்டிலும் மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் கியூபா நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் இத்தாலிக்கு சென்று அங்கே மருத்துவ உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.