இத்தாலியை அடுத்து ஸ்பெய்னில் அதிதீவிரமாகப் பரவும் கொரோனா- ஒரே நாளில் 539 பேர் உயிரிழப்பு!
25 Mar,2020
உலக அளவில் கொரோனா வைரஸால் 180 நாடுகளுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 16,568 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 3 இலட்சத்து 82 ஆயிரத்து 366 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 505 பேர் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதேவைளை, 2 இலட்சத்து 51 ஆயிரத்து 216 பேர் சாதாரண நிலையிலும் 12 ஆயிரத்து 77 பேர் வைரஸால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று இரவு வரையான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு இத்தாலியில் தீவிரமடைந்து காணப்படுகின்ற நிலையில் ஸ்பெயினிலும் வைரஸ் வேகமாகப் பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.
இதன்படி, இத்தாலியில் நேற்று மட்டும் 601 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்தமாக 6077 பேர் இறந்துள்ளனர் மேலும், நேற்று மட்டும் ஐயாயிரம் பேரளவில் (4,789) புதிய நோயாளர்க்ள இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் ஸ்பெயினில் அதிதீவிர நிலையை அடைந்து வருகின்றது. அங்கு நேற்று மட்டும் 539 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதன்படி மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 311ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே வைரஸால், அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 140 உயிரிழப்புக்களும், பிரான்சில் 186 உயிரிழப்புக்களும் ஈரானில் 127 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது