கொரோனாவை முதலில் கண்டுபிடித்து எச்சரித்த மருத்துவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசு!
21 Mar,2020
முதல் கொரோனா பாதிப்பு சீனாவில் உகான் நகரில் டிசம்பர் 8 ஆம் தேதி கண்டறியபட்டது. ஆனால் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
உகானில் உள்ள 34 வயதான கண் மருத்துவரான டாக்டர் லி வென்லியாங் மத்திய மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். சார்ஸ் போன்ற நோய் பரவுவதைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்க முயன்றார், ஆனால் “வதந்திகளை” பரப்பியதற்காக அரசாங்கத்தால் லி தண்டிக்கப்பட்டார். நிவாரண முயற்சிகளுக்கு உதவும் போது லி கடந்த பிப்ரவரி 7 ந்தேதி நோயால் இறந்தார்.
பின்னர் சுதாரித்து கொண்ட சீன அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக, அந்நாட்டில் மட்டும் 80,967 பேர் பாதிக்கப்பட்டனர். 3,248 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி, அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா, இந்த நோயை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரித்த மருத்துவர் லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
கொரோனா வைரஸை முன்பே கண்டுபிடித்த இவரை, அரசு பாராட்டாமல், முடக்கியது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் , லி வென்லியாங்கை ஐ தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள். தற்போது Li லி வென்லியாங்கிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
இது தொடர்பாக வுகான் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், லி வென்லியாங் எங்களுக்கு கொரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.
அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும். பலர் பலியாகி இருக்க மாட்டார்கள். ஆனால் முடியாமல் போய்விட்டது.
மக்களுக்காக உயிர் துறந்த லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கிறோம் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது.