கொரோனா வைரஸ்: ஆசியாவின் பலி எண்ணிக்கையை மிஞ்சிய ஐரோப்பா
18 Mar,2020
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
சீனாவில் பெரும் அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திவந்த இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில், ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.
ஆசியாவை காட்டிலும் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.