ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 1,135 ஆக உயர்வு
18 Mar,2020
சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் உருவான கொரோனா வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உலகெங்கும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 147 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17,361 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.