கடுமையான அவசரகால நடவடிக்கைகளை அறிவித்தது பிரான்ஸ்!ஒன்ராறியோவில் 24 பேர்
16 Mar,2020
ஐரோப்பாவில் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, கொரோனா வைரஸிற்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அவசரகால நடவடிக்கைகளை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பின்பற்றியுள்ளன.
அதன் பிரகாரம் ஸ்பெயினில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது மற்றும் அவசர வேலைகளை தவிர, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் இதுவரை 193 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்றும் 6,250 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 91 பேர் இறந்துள்ள நிலையில், கஃபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பெரும்பாலான கடைகள் பிரான்ஸில் மூடப்பட்டுள்ளன
கடந்த 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் 24 பேர் பாதிப்பு
ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை ஒன்ராறியோ மாகாணங்களின் 103 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் டொரன்டோவில் ஒன்பது, பீலில் ஒன்று, டர்ஹாம் பிராந்தியத்தில் மூன்று, வாட்டர்லூ பிராந்தியத்தில் இரண்டு, ஹால்டன் பிராந்தியத்தில் ஒன்று, லண்டன்-மிடில்செக்ஸில் ஒன்று, கோபூர்க்கில் ஒன்று, ஹூரான்-பெர்த்தில் ஒன்று, ஹாமில்டனில் ஒன்று மற்றும் ஒட்டாவாவில் இரண்டு பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது நூற்றுக்குஜ்ம் மேற்பட்ட நாடுகளை பதித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது