தாய்லாந்தில் கொரோனாவினால் மேலும் 32 பேர் பாதிப்பு!இந்தோனேசியாவில் 21 பேர்
16 Mar,2020
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றுமட்டும் புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை 114 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவிற்கு வெளியேயுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று புதிதாக 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 117 ஆகக் அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
சி.என்.என் இந்தோனேசியா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுகாதார அமைச்சின் அதிகாரி அக்மத் யூரியான்டோவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
புதிய வழக்குகளில், 19 ஜகார்த்தாவிலும், இரண்டு மத்திய ஜாவா மாகாணத்திலும் கண்டறியப்பட்டதாக யூரியான்டோ தெரிவித்துள்ளது.