அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!
13 Mar,2020
அமெரிக்காவில் 70 இருந்து 150 மில்லியன் பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் (டீசயைn இதுகுறித்த தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்ட எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46 சதவீதமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மோசமான சூழலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அமெரிக்கா மருத்துவ ஆய்வாளரான பிரையன் மோனஹான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சில வழிமுறைகளையும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கற்பித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜேர்மனியில் வசிக்கும் 70 சதவீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.