கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: குவைத்தில் இரண்டு வாரங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
12 Mar,2020
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நாடுகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில், கொரோனா வைரஸ் காரணமாக குவைத்தில் மார்ச் 26-ம் தேதி வரை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், திரையரங்கங்களுக்கு விடுமுறை அறிவித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், குவைத் நகரத்தில் விமான சேவை 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் விளக்கப்பட்டுள்ளது