ஈரான் தலைவர் கொமேனியின் ஆலோசகர் கொரோனா வைரசுக்கு பலி
03 Mar,2020
ஈரான் நாட்டின் சுப்ரீம் தலைவர் அயதொல்லா அலி கொமேனிக்கு ஆலோசனை கூறுவதற்கும், அவருக்கும், நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சச்சரவுகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஒரு ஆலோசனை கவுன்சில் உள்ளது. அதன் உறுப்பினர்களில் ஒருவரான முகமது மிர்முகமதி, கொரோனா வைரசுக்கு பலியானார்.
அவருக்கு வயது 71. ஈரான் நாட்டின் அரசாங்க வானொலி இதை அறிவித்தது. இத்துடன், ஈரானில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 1,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றும் அத்தியாவசியம் அல்லாத ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இங்கிலாந்து வெளியேற்றி உள்ளது.