2 மாதங்களில் 3 ஆயிரம் நிலநடுக்கங்கள்: மெக்சிகோவில் எரிமலை உருவாகும் அபாயம்!
02 Mar,2020
மத்திய மெக்சிகோவின் மைக்கோகன் (Michoacan) மாநிலம், கடந்த 2 மாதங்களில் 3 ஆயிரம் சிறிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக புதிய எரிமலை ஒன்று உருவாகி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 100 ஆண்டுகளாக புதிய எரிமலை எதுவும் உருவாகாத போதும் நாட்டில் செயற்பாட்டில் உள்ள எரிமலைகளை அதிகம் கொண்ட இடமாக மைக்கோகன் காணப்படுகிறது.
இங்கு, அடிக்கடி ஏற்படும் நில அதிர்வால் குடியிருப்புகளுக்கு அருகே புதிய எரிமலை வளர்ந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புது அச்சுறுத்தலால் சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்துள்ளனர்.