எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார்
26 Feb,2020
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91) உடல்நலக்குறைவின் காரணமாக இன்று மரணமடைந்தார்.
கடந்த 1980ம் ஆண்டு துவங்கி 30 ஆண்டுகளாக எகிப்து அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக். இவரது ஆட்சியில், வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை அதிகரித்ததால், இவரை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
இவரது ஆட்சியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 800 பேரை கொன்று குவித்ததாக, வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், அவற்றில் பல நிரூபிக்கப்படவில்லை என கூறி கடந்த 2017 ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் கெ