ஈரானிய கப்பல்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை!
25 Feb,2020
ஈரானிய கப்பல்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாகவே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்மானமானது ஷூய்பா, தோஹா மற்றும் ஷுவைக் துறைமுகங்களை உள்ளடக்கியது என குவைத் துறைமுக ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதி இதுவென குவைத் துறைமுக ஆணையகத்தின் தலைவர் ஷேக் யூசப் அப்துல்லா அல் சபா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக குவைத் ஏயர்வேஸ் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.