மூன்றாவது நாளாக நீடிக்கும் சியாரா புயல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
12 Feb,2020
பிரான்ஸில் நிலைகொண்டுள்ள சியாரா புயல் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையமான மெற்றோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மணிக்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என்பதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மெற்றோ பிரான்ஸ் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஆரம்பித்த இந்தப் புயல், நேற்று திங்கட்கிழமை, பரிஸ் உட்பட 45 மாவட்டங்களைச் சூறையாடிச் சென்றிருந்தது.
ஈஃபிள் கோபுரம் உட்பட பல பொது இடங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் பெருமளவில் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மூன்றாம் நாளாக இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 12 மாவட்டங்களுக்கு இந்தப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு அல்லது நாளை புதன்கிழமை இந்தப் புயல் கரையை கடக்கும் என மெற்றோ பிரான்ஸ் அறிவித்துள்ளது.